2014-07-12 15:19:53

குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக தனியாக இல்லம்


ஜூலை,12,2014. குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக மதுரையில் தனியாக இல்லம் வைத்து நடத்தி வருகிறார் வழக்கறிஞர் செல்வகோமதி.
சட்டம் படித்து முடிந்ததும் நீதிமன்றதுக்குப் போய் வாதாடுவதா, இல்லை... சமுதாயப் பணிக்குப் போவதா என்று தனக்குள்ளே ஒரு மனக்குழப்பம் இருந்தது என்றும், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக அடைத்து வைத்திருந்த 32 பேரை மீட்டபோது அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி தன்னை சமுதாயப் பணியே சரி என முடிவெடிக்க வைத்துவிட்டது என்றும் தி இந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் செல்வகோமதி.
மதுரையைச் சேர்ந்த செல்வ கோமதி ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ‘சோக்கோ’ அறக்கட்டளையின் துணை இயக்குநர். இவர், கடந்த 18 வருடங்களில் தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திரம், குஜராத், உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டிப்போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கொத்தடிமைத் தொழிலாளர்களின் அடிமை விலங்கை தகர்த்து எறிந்தவர்.
இதேபோல், திருமணமாகாத இளம் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் பஞ்சாலைகளின் சுமங்கலி திட்டம் குறித்தும் தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் செல்வகோமதி.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.