2014-07-07 16:32:47

அமெரிக்க மக்களிடையே மரணதணடனைக்கான ஆதரவு குறைந்துவருகிறது


ஜூலை,07,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, முதன்முறையாக அந்நாட்டில் மரணதண்டனையைவிட ஆயுள்தண்டனைக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பெருங்குற்றமிழைத்தவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதா அல்லது ஆயுள்தண்டனை வழங்குவதா என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பொதுமக்களுள் 52 விழுக்காட்டினர், ஆயுள்தண்டனைக்கு ஆதரவாகவும் 42 விழுக்காட்டினர் மட்டுமே மரணதண்டனைக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 70 முதல் 80 விழுக்காட்டினர் மரணதண்டனையை ஆதரித்துவந்த நிலையில் மக்களின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இடம்பெற்றுள்ளதாக இக்கருத்தெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
இன அடிப்படையில் பார்க்கும்போது கறுப்பினத்தவரைவிட வெள்ளை இனத்தவரே மரணதண்டனையை அதிகம் ஆதரிப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : MISNA








All the contents on this site are copyrighted ©.