2014-07-04 16:03:49

இந்தியாவில் இளையோர் மத்தியில் தற்கொலைகள் அதிகரிப்பு


ஜூலை,04,2014. இந்தியாவில் பணப் பிரச்சனைகளைவிட உணர்ச்சி தொடர்பான பிரச்சனைகளால் தங்கள் வாழ்வை மாய்த்துக்கொள்ளும் மக்களின், குறிப்பாக இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 2013ம் ஆண்டின் இந்திய தேசிய குற்றவியல் அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டில் காதல் விவகாரத்தால் தினமும் 12 பேர் வீதமும், வறுமையினால் தினமும் 5 பேர் வீதமும், பணப்பிரச்சனையால் 7 பேர் வீதமும், வேலையில்லாததால் 6 பேர் வீதமும் தற்கொலை செய்து கொண்டனர் என அவ்வறிக்கை கூறுகிறது.
குடும்பப் பிரச்சனைகளால் தினமும் 89 பேரும், நோயினால் தினமும் 72 பேரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
இவ்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார பணிக்குழு செயலர் அருள்பணி Joseph Manipadam அவர்கள், உணர்ச்சி அளவில் முதிர்ச்சி அடையாதிருப்பதே இளையோர் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.