2014-07-02 16:06:26

மத நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவதை அமெரிக்க அரசு எவ்வகையிலும் தடுக்கக் கூடாது - அனைத்து மதத் தலைவர்களின் விண்ணப்பம்


ஜூலை,02,2014 மத உரிமைகளை மதிப்பது ஒவ்வோர் அரசின் முக்கியக் கடமை என்றும், குறிப்பாக, வலுவற்ற நிலையில் இருப்போரின் மத உணர்வுகளை மதிப்பது அரசின் கடமை என்றும் அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Joseph Kurtz அவர்கள் கூறினார்.
கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர், இந்துக்கள், சீக்கியர், புத்த மதத்தினர் உட்பட அனைத்து மதத்தினரும் தங்கள் மத நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவதை அரசு எவ்வகையிலும் தடுக்கக் கூடாது என்ற விண்ணப்பத்தை அமெரிக்காவின் அனைத்து மதங்களின் தலைவர்களும் இணைந்து அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
மத உரிமைகளை மறுபடியும் நிலைநிறுத்துதல் என்ற மையக் கருத்துடன், 1993ம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த Bill Clinton அவர்களால் கையெழுத்திடப்பட்ட RFRA என்ற சட்டம் மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று மதத் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மத உரிமைகளை வழங்குவதில் அமெரிக்க ஐக்கிய நாடு எப்போதும் ஓர் எடுத்துக்காட்டாக இருந்துவந்துள்ளது என்பதை, மதத் தலைவர்களின் விண்ணப்பம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.