2014-07-01 16:00:40

மியான்மாரில் இராணுவ அதிகாரத்திற்கு எதிராக 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள்


ஜீலை,01,2014. அரசியலைமைப்புத் திருத்தங்களையும் சீர்திருத்தங்களையும் ஏற்க மறுப்பதற்கான அதிகாரத்தை மியான்மார் இராணுவத்திற்கு வழங்கும் சட்டத்திற்கு எதிராக அந்நாட்டில் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.
அரசில் இராணுவத்தின் பிடியைத் தளர்த்தும் நோக்கில் மக்களின் ஆதரவைத் திரட்டும் இந்தக் கையெழுத்துப் பிரச்சாரம் மேமாதம் 27ம் தேதி துவக்கப்பட்டு இம்மாதம் 19ம் தேதி நிறைவுக்கு வருகிறது.
எத்தகைய ஒரு சீர்திருத்தத்தையும் ஏற்க மறுப்பதற்கு இராணுவத்திற்கு இருக்கும் அதிகாரத்தை மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஆதரிப்பதற்கு மேலும் பெருமெண்ணிக்கையில் மியான்மார் மக்கள் கையெழுத்திடுவார்கள் என நம்புவதாக இந்தக் கையெழுத்து வேட்டைக்கு ஏற்பாடுச் செய்துள்ள ஜனநாயக ஆதரவுக்குழு அறிவித்துள்ளது.

ஆதாரம் : Asia News








All the contents on this site are copyrighted ©.