2014-06-26 16:43:49

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு ஐ.நா. அழைப்பு


ஜூன்,26,2014. உலகில் எல்லாருக்கும் மிகுந்த வளமான வாழ்வையும் சமத்துவத்தையும் அளிப்பதற்கு ஐ.நா. எடுக்கும் முயற்சிகளுக்கு, போதைப்பொருள் பயன்பாடும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலும் கடும் இடையூறுகளாக இருக்கின்றன என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூன் 26, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாளை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் பான் கி மூன்.
அளவுக்கு மீறி போதைப்பொருள்களை எடுப்பதால் ஆண்டுதோறும் இடம்பெறும் இறப்புகளில் இரண்டு இலட்சம் இறப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் அச்செய்தி கூறுகிறது.
உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.