2014-06-23 15:59:49

மாரடைப்பிற்கு மன அழுத்தம் காரணமாவதைக் கண்டுபிடித்துள்ளனர் அறிவியலாளர்கள்


ஜூன்,23,2014. மன அழுத்தமானது மாரடைப்பு நோய்க்கு எவ்வாறு காரணமாகின்றது என அறிவியலாளர்கள் நீண்ட காலமாக அறிந்திராத நிலையில் தற்போது முதன் முறையாக அறிவியல் ரீதியான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
Massachusetts பொதுமருத்துவமனை மற்றும் Harvard மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய ஆய்வுகளின் விளைவாக மன அழுத்தம், இரத்த நாளங்களின் வீக்கம் என்பன மாரடைப்பிற்கு காரணமாக அமைவதாக கண்டறிந்துள்ளனர்.
இவ்வாய்வின்படி மன அழுத்தமானது நோய் எதிர்ப்பு முறைமையை செயலிழக்கச் செய்வதாகவும், இதனால் குருதியில் வெண்குருதிச் சிறுதுணிக்கைகளின் அளவு அதிகரித்து நாடி, நாளங்களில் மோசமான வீக்கம் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக நாடி, நாளங்களில் சேதம் ஏற்பட்டு மாரடைப்பு நோய் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.