2014-06-20 16:16:19

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஐ.நா.


ஜூன்,20,2014. போர் அல்லது அடக்குமுறைகளுக்குப் பயந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 2013ம் ஆண்டில் அதிகளவு இருந்ததாக ஐ.நா. புலம்பெயர்வோர் நிறுவனம் கூறியது.
2013ம் ஆண்டில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 5 கோடியே 12 இலட்சம் எனவும், இவ்வெண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட அறுபது இலட்சம் அதிகம் எனவும் அந்நிறுவன இயக்குனர் Antonio Guterres கூறினார்.
இவ்வெண்ணிக்கை பிறரன்பு நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக இருப்பதாகவும், சிரியா, மத்திய ஆப்ரிக்கா, தென் சூடான் ஆகிய நாடுகளில் இடம்பெறும் சண்டைகள் இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனவும் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தார் Guterres.
உலகில் 63 இலட்சம் மக்கள், ஆண்டுக்கணக்காக, சிலநேரங்களில் பத்து ஆண்டுகள்கூட புலம்பெயர்ந்த நிலையில் உள்ளனர் என்றும், உலகில் இன்று 3 கோடியே 30 இலட்சம் பேர் நாட்டுக்குள்ள இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார் Guterres.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.