2014-06-13 15:49:39

ஆறு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளுக்கு திருத்தந்தை ஒப்புதல்


ஜூன்,13,2014. வணக்கத்துக்குரிய இருவரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகள், ஆறு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகள் ஆகியவை குறித்த ஆவணங்களை இவ்வியாழன் மாலை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சில் மரியின் பிள்ளைகள் சபைய ஆரம்பித்த அருள்பணி Ludovico-Eduardo Cestac, கொன்சொலாத்தா மறைபோதக சகோதரிகள் சபையின் இத்தாலிய அருள்சகோதரி Irene Stefani ஆகிய இருவரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளை ஏற்றுள்ளார் திருத்தந்தை.
இன்னும், ஐந்து இத்தாலியர்கள், ஓரு பிரித்தானியர் என ஆறு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறை குறித்த விபரங்களையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்து இத்தாலிய இறையடியார்களில் ஒருவரான Uberto Mori அவர்கள், பொதுநிலை விசுவாசி. ஒரு குடும்பத்தின் தந்தையாகிய இவர் Modenaவில் 1926ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்து, 1989ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி Paviaவில் இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.