2014-06-09 16:57:23

Boko Haram வன்முறை கும்பலால், கிறிஸ்தவ, இஸ்லாமிய வீரகளுக்கு இடையே பகைமை உணர்வுகள் வளரும் ஆபத்து உள்ளது - கர்தினால் Onaiyekan


ஜூன்,09,2014. நைஜீரியா நாட்டில், Boko Haram வன்முறை கும்பலால் தூண்டப்படும் கலவரங்களை, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் இடையே எழுந்துள்ள மோதல்களாக அர்த்தம் கொள்வது மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்று Abuja பேராயர், கர்தினால் John Onaiyekan அவர்கள் கூறியுள்ளார்.
Boko Haram குழுவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, சட்ட விரோதமான ஒரு குழுவுக்கு எதிரான முயற்சியாக நோக்குவதற்குப் பதிலாக, இஸ்லாமிய மதத்திற்கு எதிரான ஒரு முயற்சியாகக் கருதுவது, இந்த வன்முறைக் கும்பலுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று கர்தினால் Onaiyekan அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகையத் தவறான கருத்துப் பரிமாற்றங்களால், காவல்துறை, இராணுவம் ஆகிய அமைப்புக்களில் இணைத்து பணியாற்றும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வீரகளுக்கு இடையே பகைமை உணர்வுகள் வளரும் ஆபத்தும் உள்ளது என்று கர்தினால் Onaiyekan அவர்கள் கூறியுள்ளார்.
Boko Haram குழுவினருக்கு இராணுவ அதிகாரிகள் சிலர் ஆயுதங்களை வழங்கியுள்ளனர் என்று அண்மையில் கூறப்பட்டது கவலை தரும் ஒரு செய்தி என்றும், நாட்டில் வன்முறையை ஒழிக்க, பல்வேறு அரசுத் துறைகளில் நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கர்தினால் Onaiyekan அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கருத்து தெரிவித்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.