2014-06-07 15:18:47

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிரேசில் அரசு செலவிடும் தொகைக்கு ஆயர்கள் எதிர்ப்பு


ஜூன்,07,2014. பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அரசு அதிகத் தொகையைச் செலவிடுவது குறித்த தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
கல்விக்கும், நலவாழ்வுத் திட்டங்களுக்கும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளவேளையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அரசு பெருந்தொகையைச் செலவிடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் ஆயர்கள்.
இந்த விளையாட்டுப் போட்டி நடக்கும் நாள்களில் இடம்பெறவுள்ள பாலியல் சார்ந்த குற்றங்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆயர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இம்மாதம் 12 முதல் வருகிற ஜூலை 13 வரை பிரேசில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும். ஏறக்குறைய எட்டு இலட்சம் இரசிகர்கள் வெளிநாடுகளிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Reuters







All the contents on this site are copyrighted ©.