2014-06-04 14:59:37

வத்திக்கானில் நாடோடி இனத்தவர்க்கான பன்னாட்டுக் கருத்தரங்கு


ஜூன் 04,2014. “திருஅவையும் நாடோடி இனத்தவரும் : புறப்பகுதிகளில் நற்செய்தி அறிவிக்க…” என்ற தலைப்பில் இவ்வியாழன், வெள்ளி தினங்களில் வத்திக்கானில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
குடியேற்றதாரர் மற்றும் இடம்விட்டு இடம் பெயரும் மக்களுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவை, ஜூன் 5, 6 தேதிகளில் நடத்தும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், நாடோடி இன மக்களுக்குப் பணிபுரியும் ஆயர்கள் மற்றும் தேசிய இயக்குனர்கள் கலந்து கொள்வார்கள்.
போமெட்சியாவிலுள்ள நாடோடி இனத்தவர் முகாமை, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் பார்வையிட்டதன் ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்குத் தயாரிப்புகள் குறித்த பயிலரங்கங்களும் இந்நாள்களில் நடைபெறும்.
இந்தியாவில் வாழும் ஏறத்தாழ ஒரு கோடியே 80 இலட்சம் நாடோடி இனத்தவர் உட்பட ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் ஏறக்குறைய 3 கோடியே 60 இலட்சம் நாடோடி இனத்தவர் வாழ்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.