2014-05-31 18:30:18

மே 31, புகையிலை எதிர்ப்பு உலக நாள்


மே,31,2014. புகைபொருட்கள் மீது பெருமளவு வரி விதிக்குமாறு WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் உலகநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்மூலம் புகைபிடிப்போரின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கமுடியும் என்றும் நலப்பணிகளுக்கான வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மே 31, இச்சனிக்கிழமையன்று, புகையிலை எதிர்ப்பு உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, உலக நலவாழ்வு நிறுவனம் சிகரெட்டுக்கள் மீதான வரியை 50 விழுக்காடு உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளது.
புகைத்தல் காரணமாக ஒவ்வொரு 6 நொடிக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகின்றது.
‘புகையிலைக்கான வரியை உயர்த்துவதைவிட புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வே முக்கியம்' என்கிறார் ஆவடியைச் சேர்ந்த தேவேந்திரன். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பழக்கத்துக்கு அடிமையான இவர், இன்று புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்.
வரி உயர்த்துவதை விடுத்து, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அதற்கு செலவழிப்பது நல்ல பயனைத் தரும். தயவுசெய்து இன்றைய இளைஞர்களை என்னுடைய நிலைமைக்கு ஆளாக்கி விடாதீர்கள் என்கிறார் தேவேந்திரன்.

ஆதாரம் : BBC / The Hindu








All the contents on this site are copyrighted ©.