2014-05-31 18:31:02

சார்ஸ் (SARS) மற்றும் மெர்ஸ் (MERS) நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பு


மே,31,2014. உலக அறிவியலாளர்களுடன் இணைந்த சுவிஸ் ஆய்வாளர்கள் கொரோனா (Coronavirus) என்ற ஒரு வகை கிருமிக்கான புதிய தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா என்ற கிருமியினால் ஏற்படும் சார்ஸ் (SARS) மற்றும் மெர்ஸ் (MERS) ஆகிய நோய்கள் மனிதனின் மேல் மற்றும் கீழ் சுவாச தடங்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதனால் 2002ம் ஆண்டு உலக முழுவதும் இந்த நோய் தாக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சவுதி அரேபியாவில் சுமார் 636 பேர் பாதிக்கப்பட்டதுடன், 193 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்நோயை போக்குவதற்கான மருந்தை சுவீடன் நாட்டை சார்ந்த எட்வர்ட் என்ற அறிவியலாளரும் சுவிசை சேர்ந்த வால்கோர் என்ற ஆய்வாளரும் தங்களது ஆராய்ச்சி குழுவினருடன் இணைந்து, k22 என்ற மருத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த மருந்து கொரோனா வைரஸ் கிருமியை தாக்கிக் கொல்லும் வல்லமை படைத்தது என அவர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Medicalnewstoday








All the contents on this site are copyrighted ©.