2014-05-30 16:31:28

ஜூன் 16, Canterbury பேராயரும், திருத்தந்தையும் வத்திக்கானில் சந்திப்பு


மே,30,2014. ஜூன் 16, திங்களன்று ஆங்கிலிக்கன் சபையின் உயர் தலைவரும், Canterbury பேராயருமான Justin Welby அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்திக்க வருகிறார்.
உலகெங்கும் நடைபெற்றுவரும் மனித வர்த்தகம் மற்றும் இன்றைய அடிமைத்தனம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பேராயர் Welby அவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறுவிய Global Freedom Network என்ற அமைப்பின் செயல்பாடுகள் குறித்து இவ்விருவரும் இந்தச் சந்திப்பின்போது பேசுவர் என்று ஆங்கிலிக்கன் சபையின் அறிக்கை கூறுகிறது.
பேராயர் Welby அவர்கள், திருத்தந்தையைச் சந்திப்பது இது இரண்டாவது முறை என்றும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் இருவருக்கும் இடையே வத்திக்கானில் ஒரு சந்திப்பு நிகழ்ந்ததென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பேராயர் Welby அவர்கள் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் மேற்கொண்ட பயணத்தின்போது, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள தேவ நிந்தனைச் சட்டத்தை அரசு திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் என்றும் ஆங்கிலிக்கன் சபையின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Zenit / ICN








All the contents on this site are copyrighted ©.