2014-05-30 16:39:55

உடல் எடை கூடுதல் உலகெங்கும் அதிகரித்துள்ளது - மருத்துவ ஆய்வு


உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்றும், அதிகரித்துவரும் இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் வெற்றிபெறவில்லை என்றும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘Lancet’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் அதிக எடை உள்ளவர்கள் என்று கருதலாம் என்று கண்டறிப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, பெரியவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என எல்லா தரப்பு மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொதுவாக, வருமானங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, இந்த உடல் எடையும் அதிகரிப்பதாகவும், அமெரிக்காவில் முப்பது விழுக்காடு மக்கள் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.