2014-05-29 16:47:52

தன் உயிரைக் காத்த மருத்துவருடன் திருத்தந்தை சந்திப்பு


மே,29,2014. தன் உயிரைக் காத்த மருத்துவர் ஒருவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் சந்தித்தார் என்ற செய்தியை CNA கத்தோலிக்கச் செய்தி இப்புதனன்று வெளியிட்டது.
1980ம் ஆண்டு, இயேசு சபை அருள் பணியாளராக செயலாற்றிய Bergoglio அவர்களின் பித்தப்பை செயலிழக்கும் நிலையில் இருந்தபோது, அவருக்கு ஓர் அறுவைசிகிச்சை வழியாக மறுவாழ்வு தந்தவர், Juan Carlos Parodi என்ற மருத்துவர் என்று CNA செய்திக் குறிப்பு கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் தன்னைச் சந்தித்தார் என்றும், இச்சந்திப்பின்போது, தன் உயிரைக் காத்ததற்காக திருத்தந்தை சிறப்பான நன்றி கூறினார் என்றும் மருத்துவர் Carlos Parodi அவர்கள், La Nacion என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பித்தப்பை செயலிழந்து மருத்துவமனையில் இருந்த அருள் பணியாளர் Bergoglio அவர்களுக்கு இந்த அறுவைச் சிகிச்சையை, தான் இலவசமாகச் செய்ததாகவும், இதற்குப் பதிலாக அருள் பணியாளர் தன் கையொப்பம் இட்ட நூல் ஒன்றை தனக்கு அளித்ததாகவும் மருத்துவர் Carlos Parodi அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.