2014-05-29 16:40:11

Cameroon நாட்டு Bamenda உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா குறித்து பேராயர் Esua


மே,29,2014. Cameroon நாட்டுக் கலாச்சாரத்துடன் இயைந்து செல்லும் நம்பிக்கையை வளர்ப்பது, Bamenda உயர் மறைமாவட்டத்தின் ஒரு முக்கியப் பணி என்று பேராயர் Cornelius Fontem Esua அவர்கள் கூறினார்.
ஜெர்மன் நாட்டு Dehonian துறவுச் சபையைச் சார்ந்தவர்கள், 1912ம் ஆண்டு Cameroon நாட்டிற்கு நற்செய்தியைக் கொணர்ந்ததன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் Bamenda உயர் மறை மாவட்டத்தின் பேராயர், தங்கள் மறைமாவட்ட தோற்றம், வளர்ச்சி குறித்துFides செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள் ஒருவார மேய்ப்புப்பணி பயணத்தை அங்கு மேற்கொண்டுள்ளார்.
Bamenda பகுதியில் வாழும் 10 இலட்சம் மக்களில், 3 இலட்சம் மக்கள் கத்தோலிக்கர்கள் என்றும், மற்றும், இரு பெரும் கிறிஸ்தவ சபையினரும், மக்களில் 5 விழுக்காட்டினர் இஸ்லாமியர் என்றும் பேராயர் Fontem Esua அவர்கள் தெரிவித்தார்.
15 துறவு சபையினர் பணியாற்றும் Bamenda உயர் மறைமாவட்டத்தில், 145 பாலர் பள்ளிகள், 13 உயர் நிலைப் பள்ளிகள், 17 நலவாழ்வு மையங்கள் வழியே கல்வியிலும், நலத்துறையிலும் தலத்திருஅவையின் பணி நல்ல நிலையில் உள்ளது என்றும் பேராயர் Fontem Esua அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.