2014-05-19 16:28:29

பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றஞ்சாட்டப்பட்டவர் சுட்டுக்கொலை


மே 19, 2014. தேவநிந்தனைக் குற்றச்சாட்டின்பேரில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவரை, 15 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
Ahmadis என்ற இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக, கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வாசகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த Khalil Ahmad என்ற 65 வயது முதியவர், கடந்த செவ்வாயன்று, தேவ நிந்தனைக் குற்றஞ்சாட்டப்பட்டு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான இவரைச் சந்திக்கும் விண்ணப்பத்துடன் காவல் நிலையம் வந்த 15 வயது சிறுவன் ஒருவன், Khalil Ahmadஐ அங்கேயே சுட்டுக் கொன்றுள்ளான்.
தேவநிந்தனைக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் பாகிஸ்தானின் 1986ம் ஆண்டு சட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பது, இத்தகைய நிகழ்வுகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது எனச் செய்தி நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : Asia News








All the contents on this site are copyrighted ©.