2014-05-10 16:15:06

மத்தியக்கிழக்கு கிறிஸ்தவர்களின் துன்பநிலைகள் குறித்து திருத்தந்தையுடன் விவாதிக்க உள்ளதாக முதுபெரும் தந்தை


மே 10,2014. இம்மாதம் 25ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தான் எருசலேமில் சந்திக்கும்போது, மத்தியக்கிழக்கு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் துன்பநிலைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக அறிவித்தார் Ecumenical கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை பர்த்தலோமியோ.
முதன் முதலாக கத்தோலிக்க திரு அவைத்தலைவருக்கும் Ecumenical கிறிஸ்தவசபை முதுபெரும் தந்தைக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கு முன் எருசலேமில் இடம்பெற்ற சந்திப்பிற்குப்பின் கடந்தகாலங்களில் ஒன்றிப்பு எனும் குறிக்கோளை நோக்கி இவ்விரு சபைகளின் பயணம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது என்று கூறிய முதுபெரும் தந்தை பர்த்தலோமியோ அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவர்களின் நிலை குறித்து விவாதிப்பது திருத்தந்தையுடன் தான் மேற்கொள்ளும் சந்திப்பில் முக்கிய இடம் வகிக்கும் என்றார்.
அண்மைக்கால திருத்தந்தையர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில் தங்களை அர்ப்பணித்து செயல்படுவது குறித்து தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார் முதுபெரும் தந்தை பர்த்தலோமியோ.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.