2014-05-10 16:09:23

தொழில் உலகில் கிறிஸ்தவ நன்னெறி மதிப்பீடுகளைக் கொணர்ந்து அதற்கு சாட்சியாக விளங்குங்கள்


மே 10,2014. திருஅவையின் சமூகப் படிப்பினைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கென திருஅவையில் உருவாக்கப்பட்ட Centesimus Annus என்ற அமைப்பின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் அவர்களின் பணி குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் Centesimus Annus என்ற சுற்றுமடலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பொருளாதார உலகில் நன்னெறி மதிப்பீடுகளை புகுத்த முயன்றுவருவது குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் ஒருமைப்பாடு, சரிநிகர் பகிர்வு, வேலைக்கு முதலிடம் போன்ற வார்த்தைகள் பலருக்கு ஒவ்வாமையைத் தருவதாக உள்ளன எனவும் கவலையை வெளியிட்டார்.
எந்த ஒரு தொழிலிலும், மனிதனுக்கும் பொதுநலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதை நற்செய்தி வலியுறுத்துகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றையை தொழில் உலகில் கிறிஸ்தவ நன்னெறி மதிப்பீடுகளைக் கொணர்ந்து அதற்கு சாட்சியாக விளங்கவேண்டிய ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.