2014-05-09 16:43:56

இத்தாலியின் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களின் ஒன்றிய ஆண்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்து


மே,09,2014. ஐரோப்பியக் கண்டத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் கிறிஸ்தவ நம்பிக்கை ஒரு முக்கிய அம்சமாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இத்தாலியின் கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களின் ஒன்றியம், இத்தாலியின் பதுவை நகரில், இவ்வியாழன் மாலை துவக்கிய 63வது ஆண்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்தில் தன் விருப்பத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"பாதைகளின் சந்திப்பில் ஐரோப்பா: ஒரு புதிய கண்டத்தை உருவாக்குவதில் ஒருங்கிணைந்த பாதை" என்ற தலைப்பில் நடைபெறும் பல்கலைக் கழகக் கூட்டத்திற்கு தன் செபங்களையும், ஆசீரையும் வழங்குவதாக திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, மே 8ம் தேதி, இவ்வியாழனன்று இத்தாலியக் காவல்துறையின் 162வது ஆண்டு நிறைவையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காவல்துறை தலைவரான Alessandro Pansa அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இவ்விரு வாழ்த்துச் செய்திகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.