2014-05-07 16:12:17

மனிதமாண்பிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து கமரூன் ஆயர்கள் கண்டனம்


மே 07,2014. கமரூன் நாட்டில் ஒரு மாத காலமாக கடத்தி வைக்கப்பட்டிருக்கும் மூன்று கத்தோலிக்க அருட்பணியாளர்கள் விடுவிக்கப்படவேண்டும் என அந்நாட்டு ஆயர் பேரவை அழைப்புவிடுத்துள்ளது.
கடந்த மாதம் 4ம் தேதி கமரூனில் பணியாற்றிவந்த இரு இத்தாலிய அருட்பணியாளர்கள் Gianantonio Allegri, Giampaolo Marta மற்றும் கானடா நாட்டு அருட்சகோதரி Gilberte Bussier என மூவர் கடத்தப்பட்டு, இதுவரை அவர்களைக் குறித்து எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை.
திருஅவை அதிகாரிகள் மீது தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்படும் தாக்குதல்களையும், மனிதமாண்பிற்கு எதிராக இடம்பெறும் அச்சுறுத்தல்களையும் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாக ஆயர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.