2014-05-06 15:57:25

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு Ecumenical கிறிஸ்தவ சபையின் பாராட்டு


மே 06,2016. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் வாழ்வு முழுவதும் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் திருஅவைக்கான அர்ப்பணத்தால் நிறைந்திருந்தது என பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் Ecumenical கிறிஸ்தவசபை முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew.
இன்றைய நவீன உலகு எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தவைகளில் முன்னாள் திருத்தந்தையின் கருத்துக்கள் Ecumenical கிறிஸ்தவசபையின் கருத்துக்களோடு எப்போதும் ஒத்திணங்கிச் சென்றதைக் காண முடிந்தது என்றார் முதுபெரும் தலைவர்.
இறையியல் துறையில் சிறந்து விளங்கும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இறையியல் படிப்பினைகளால் கவரப்பட்டோருள் Ecumenical கிறிஸ்தவசபையின் பல கல்வியாளர்களும் அடங்குவர் என மேலும் கூறினார் அச்சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew.

ஆதாரம்: CWN








All the contents on this site are copyrighted ©.