2014-05-05 16:51:22

2012ம் ஆண்டிறுதியில் உலகில் 123 கோடி கத்தோலிக்கர்கள் இருந்தனர்


மே 05,2014. 2012ம் ஆண்டின் இறுதிவரையுள்ள புள்ளிவிவரத்தின்படி, உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, சமச்சீராக உயர்ந்துவருவதாக திருப்பீடம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
உலகின் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையும், குருக்கள், நிரந்தர தியாக்கியோன்கள் மற்றும் ஆண்துறவறத்தார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது எனக்கூறும் இந்த அறிக்கை, பெண் துறவறத்தாரின் எண்ணிக்கை குறிப்பிடத்தகும்வகையில் குறைந்துவருவது குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது.
2012ம் ஆண்டு டிசமபர் 31ம் தேதி வரையுள்ள புள்ளிவிவரங்களின்படி, உலகில் 122 கோடியே 80 இலட்சம் கத்தோலிக்கர்கள் இருந்தனர். இது உலக மக்கள்தொகையில் 17.5 விழுக்காடாகும். இது தவிர சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் மேலும் 48 இலட்சம் மக்கள், மறைந்து வாழும் கத்தோலிக்கர்களாக உள்ளதாகவும் திருப்பீடம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2012ம் ஆண்டில் உலகில் 1 கோடியே 64 இலட்சம் திருமுழுக்குகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.