2014-05-03 18:19:32

வரும் வார ஐ.நா. கருத்தரங்கு குறித்து திருப்பீடச் செய்தி தொடர்பாளர்


மே 03,2014. சித்ரவதைகளுக்கு எதிராக கூடி விவாதிக்கவிருக்கும், வரும் வாரத்தின் ஐ.நா. கருத்தரங்கு, அதற்கான அர்ப்பணத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டுமேயொழிய சுய இலாபங்களுக்காக பிறரை நிர்ப்பந்திக்கும் ஓர் ஆயுதமாக இது பயன்படுத்தப்படக்கூடாது என அழைப்புவிடுத்துள்ளது திருப்பீடம்.
வேண்டாத நாடுகளை பயமுறுத்தவும், நிர்ப்பந்திக்கவும், சித்ரவதைகளுக்கு எதிரானச் சட்டம் என்பது ஓர் ஆயுதமாக மாறிவிடக்கூடாது, மாறாக சித்ரவதைகளை தடுப்பதற்கான அர்ப்பணமாக அது இருக்கவேண்டும் என உரைத்த திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளர் அருட்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி, சுயசார்பற்றதாய், பொதுநலனை மனதில்கொண்டதாய் இக்கருத்தரங்கின் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் என்றார்.
சித்ரவதைகளை தடுப்பதற்கனா ஐ.நா. விதிமுறைகள், நல்நோக்கத்துடன் விவாதிக்கப்படும்போது மட்டுமே, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை கைக்கொள்ள முடியும் எனவும் எடுத்துரைத்தார் திருப்பீடச் செய்தி தொடர்பாளர் இயேசு சபை அருட்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.