2014-05-03 18:19:59

முன்னேற்றங்களைக் கண்டுவரும் தென்னாப்ரிக்காவில் சுரண்டலே பெரும்பிரச்னை என்கிறார் கர்தினால்


மே 03,2014. தென் ஆப்ரிக்காவில் இனவெறிக் கொள்கைகள் அகற்றப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் எண்ணற்ற முன்னேற்றங்களைக் கண்டுள்ளபோதிலும், நாட்டிற்குள் சுரண்டலை எதிர்த்துப் போராடவேண்டிய அத்தியாவசியம் இன்னும் உள்ளது என்றார் அந்நாட்டுக் கர்தினால் Wilfred Napier.
1994ம் ஆண்டு, முதல் சுதந்திரத் தேர்தல் இடம்பெற்றபின் கடந்த 20 ஆண்டுகளில், நாட்டிற்குள் கலாச்சாரங்களிடையேயும், இனங்களிடையேயும் நல்ல இணக்கவாழ்வு உருவாக்கப்பட்டுள்ளது என்ற அந்நாட்டின் Durban பேராயர் கர்தினால் Napier, வெவ்வேறு இனங்களின் மக்கள் ஒருவரையொருவர் இவ்வளவு விரைவாக ஏற்றுக்கொள்வார்கள் என தான் எண்ணியதில்லை என்றார்.
இத்தகைய நல்ல அடையாளங்கள் இருப்பினும், நாட்டில் தலைவிரித்தாடும் இலஞ்ச ஊழலும், சுரண்டலும், பக்கசார்பு நிலைகளும் வருங்காலம் குறித்த அச்சத்தைத் தந்துகொண்டிருப்பதாகவும் கவலையை வெளியிட்டார் கர்தினால் Napier.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.