2014-05-03 18:20:07

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் பல்வேறு மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து எடுத்துவரும் முயற்சிகளுக்கு திருஅவைப் பாராட்டு


மே 03,2014. மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் பல்வேறு மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டும் அதேவேளை, பேரழிவை தடுக்க ஐ.நா. அமைதி காப்பாளர்களை அங்கு நிறுத்துவது காலம் தாழ்த்தப்பட்டுவருவது குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் கத்தோலிக்க உதவி நடவடிக்கையாளர் ஒருவர்.
மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைநகர் Banguiவில் கடந்த 17 மாதங்களாக இடம்பெற்றுவரும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்நாட்டு மதத்தலைவர்கள் ஆற்றிவரும் பணிகளால் ஊக்கம்பெற்ற பொதுமக்களும் சிறப்புச் சேவைகளை ஆற்றி வருவதாகக் கூறினார் CRS எனும் கத்தோலிக்க துயர்துடைப்பு அமைப்பின் அதிகாரி கிம் போஸ்னியாக்.
பல ஆயிரக்கணக்கில் உயிர்களை பலிவாங்கி 15 இலட்சம் பேரை குடிபெயர்ந்தவர்களாக மாற்றியுள்ள இந்த சண்டைகளை நிறுத்த ஐ.நா. அமைதிகாப்பாளர்கள் நாட்டிற்குள் கொணரப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் போஸ்னியாக்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.