2014-05-02 16:15:46

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசியல் பழிவாங்கல்களுக்கும் பயன்படுத்திக் கொள்கிறது : அமெரிக்கா அறிக்கை!


மே02,2014. இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டப் பின்னரும், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக ஆரம்பித்திருப்பதாக தெரிவித்து, தேடுதல்கள், திடீர் கைதுகள் போன்றவற்றை இலகுப்படுத்தும் வகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுலாக்கியுள்ள இலங்கை அரசாங்கம், பல புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் சில அரசியல் பழிவாங்கல்களுக்கும் பயன்படுத்திக் கொள்கிறது என்று தன் அறிக்கையில் சுட்டிக்காட்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆதாரம் : Neruppu








All the contents on this site are copyrighted ©.