2014-04-28 16:51:56

பேரிடர் களைவு கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது இலங்கை


ஏப்,28,2014. பேரிடர்களின்போது உலக வங்கியினால் வழங்கப்படுகின்ற அவசர கடன் திட்டத்தை பெற்றுக்கொள்ளும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
ஆழிப்பேரலை, சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் நிலையில், உடனடியாக இந்தக் கடன்களை வழங்கும் திட்டத்தை உலக வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இலங்கைக்கு 102 மில்லியன் டாலர்களை வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேரிடர்கள் ஏற்படும்போது, வறிய மற்றும் நடுத்தர மக்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில் இந்தக் கடன் நிதி வழங்கப்படுவதாக உலக வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.