2014-04-28 16:46:31

ஈராக்கில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவது குறித்து முதுபெரும் தலைவர் சாக்கோ கவலை


ஏப்,28,2014. ஆறு இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஈராக்கின் பாக்தாத் நகரில், இன்னும் 10 ஆண்டுகளில் ஒரு சில ஆயிரம் கிறிஸ்தவர்களே வாழ்வார்கள் என்ற கவலையை வெளியிட்டுள்ளார் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவர், பேராயர் Louis Raphael Sako.
பாக்தாத் நகரில் மட்டும் ஆறு இலட்சம் கிறிஸ்தவர்கள் என்றும், ஈராக் நாடு முழுவதும் 10 இலட்சம் கிறிஸ்தவர்கள் என்றும் வாழ்ந்த நிலை மாறி, தற்போது நாடு முழுவதும் 4 இலட்சம் கிறிஸ்தவர்களே உள்ளனர் என்றார் முதுபெரும் தலைவர் சாக்கோ.
கிறிஸ்தவர்கள் ஈராக் நாட்டை விட்டு பெரும் எண்ணிக்கையில் வெளியேறி வருவதற்கு போதிய பாதுகாப்பின்மைகளும், மரண அச்சுறுத்தல்களும், கிறிஸ்தவர்களின் உடமைகள் இராணுவத்தால் பறிக்கப்படுவதும் முக்கிய காரணம் என்ற கவலையையும் வெளியிட்டார், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தலைவர் பேராயர் சாக்கோ.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.