2014-04-24 16:31:41

தென்கொரியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ளது - கத்தோலிக்க ஆயர் பேரவை


ஏப்.24,2014. தென்கொரியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ளது என்று அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2013ம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தற்போது, தென்கொரியாவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 55 இலட்சத்தை எட்டியுள்ளது என்றும், இது கடந்த ஆண்டைவிட 1.5 விழுக்காடு அதிகம் என்றும் ஆயர் பேரவை அறிக்கை கூறுகிறது.
2013ம் ஆண்டில் 1,18,830 பேர் புதிதாகத் திருமுழுக்கு பெற்றனர் என்றும், தென்கொரிய மக்கள் தொகையில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 10.4 விழுக்காடு என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர்களில் 56 விழுக்காட்டினர் தென்கொரியாவின் நான்கு பெருநகரங்களில் வாழ்கின்றனர் என்றும், ஏனையோர் நாட்டின் பிறபகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.