2014-04-21 14:53:27

பொய்க் குற்றச்சாட்டுடன் பாகிஸ்தான் சிறையில் வாடும் கிறிஸ்தவர்களுக்கான சிறப்புச் செபம்


ஏப்.21,2014. பாகிஸ்தானின் தெய்வ நிந்தனைச் சட்டத்தின்கீழ் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இரு கிறிஸ்தவர்களின் விடுதலைக்கான செப மற்றும் உண்ணாநோன்பு நாளாக கடந்த பெரிய வெள்ளி தினத்தை சிறப்பித்தனர் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்.
தேவ நிந்தனைச் சட்டத்தின்கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் Sawan Masih அவர்களுக்கும், Asia Bibi அவர்களுக்கும் இப்பெரிய வெள்ளி நாளில் சிறப்பு செபங்களை வெளியிடுவதோடு, ஒடுக்கப்பட்டுள்ளோருக்கும் வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டுள்ளோருக்கும், செபிக்குமாறும் தன் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார் இஸ்லாமாபாத் இராவல்பிண்டி ஆயர் Rufin Anthony.
பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தை ஒரு கறுப்புச் சட்டம் என அழைத்த ஆயர் அந்தோணி அவர்கள், பாகிஸ்தானின் மத சிறும்பான்மையினர் தங்கள் விசுவாசத்திற்காக தொடர்ந்து சித்ரவதைப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
தனிப்பட்ட நபர்களால் பொய்யான முறையில் தேவநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட Sawan Masih, Asia Bibi என்ற இரு கிறிஸ்தவர்களும், தற்போது மரணதண்டனையை எதிர்நோக்கி பாகிஸ்தான் சிறையில் வாடி வருகின்றனர்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.