2014-04-14 17:03:27

'வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமல் புவி வெப்பமடைதலை தவிர்க்க முடியும்', ஐநா.


ஏப்.14,2014. பேரழிவைத் தரக்கூடிய புவி வெப்பமாதலை தவிர்ப்பதற்கான இலக்கை, வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமலேயே எட்ட முடியும் என, பல்வேறு அரசுகளின் அறிவியல் பிரதிநிதிகளைக் கொண்ட ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் குறித்து ஆய்வுகளை மேறகொண்டுவரும் ஐ.நா.வின் இக்குழு, அதிகமாக கரிமத்தை சுற்றுச்சூழலில் வெளியிடக்கூடிய எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உலகம் வேகமாக விலகிக்கொள்ள வேண்டும் என தன் அறிக்கையில் எச்சரித்துள்ளது.
பெட்ரோலிய எரிபொருள் பயன்படுத்தலை உலக அளவில் குறைப்பது இயல்பு வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்காத ஒன்றே என்று கூறும் இந்த அறிக்கை, தூய்மையான, மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எரிபொருளை நோக்கியத் தேடலில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
இதனால், சற்று தாமதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படுமேயொழிய, பெரும் தியாகத்தை செய்ய வேண்டிய நிலை வராது என்றும் அக்குழு கூறியுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.