2014-04-12 16:20:39

இந்தியாவை அன்னைமரியிடம் அர்ப்பணிக்கிறார் கர்தினால் கிரேசியஸ்


ஏப்.12,2014. இந்திய மக்களின் வாழ்வு புதுப்பிக்கப்படவும், நாட்டின் புதிய நற்செய்திப் பணிக்கும் அன்னைமரியின் பரிந்துரையை கேட்பதாகத் தெரிவித்தார் மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் புனிதப்பொருள் வைக்கப்பட்டுள்ள Bandraவிலுள்ள மலைமாதா பசிலிக்காவுக்கு இச்சனிக்கிழமையன்று சென்று இந்தியாவை அன்னைமரியிடம் அர்ப்பணித்தார் கர்தினால் கிரேசியஸ்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அவனியில் அமைதி திருமடல் வெளிவந்ததன் 51ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, மலைமாதா பசிலிக்கா சென்று திருத்தந்தையர் பிரான்சிஸ், 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய மூவருக்காகவும் செபித்தார் கர்தினால் கிரேசியஸ்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அவனியில் அமைதி திருமடல் 1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியிடப்பட்டது.
இம்மாதம் 27, இறைஇரக்க ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்தும் திருப்பலியில் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரையும் புனிதர் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.