2014-04-11 16:28:23

2015ம் ஆண்டுக்குள் அனைத்துச் சிறாருக்கும் கல்வி, பான் கி மூன்


ஏப்.11,2013. 2015ம் ஆண்டுக்குள் அனைத்துச் சிறாரும் பள்ளிக்குச் செல்வதற்கு ஐ.நா. நிறுவனம் எடுத்துவரும் புதிய முயற்சிகளுக்கு உலகளாவியத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், உலகின் புகழ்பெற்ற நபர்களும் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
சிறார் பள்ளிக்குச் செல்லாத தற்போதைய நிலை நீடித்தால், அனைத்துச் சிறாருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தை 2086ம் ஆண்டில்தான் நிறைவேற்ற முடியும் என, வாஷிங்டனில் உலகின் பிரபலங்களுடன் நடந்த கூட்டமொன்றில் தெரிவித்தார் பான் கி மூன்.
இவ்வியாழனன்று நடந்த கூட்டத்தில், பாடகரும் கவிஞருமான Shakira, நடிகர்கள் Jude Law, Goldie Hawn, CNN அனைத்துல அமைப்பின் Isha Sesay உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.