2014-04-09 16:28:40

பொதுத் தேர்தல்களையொட்டி, இந்தியத் திருஅவை எழுப்பிவரும் செபங்களுக்கு குடியரசுத் தலைவரின் நன்றி


ஏப்.09,2014. இந்தியாவில் துவங்கியுள்ள பொதுத் தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெறவேண்டும் என்று இந்தியத் திருஅவை எழுப்பிவரும் செபங்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முக்கர்ஜி அவர்கள் நன்றி கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் புதியத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், பேரவையின் ஏனைய புதியப் பொறுப்பாளர்களுடன் இந்திய அரசுத் தலைவரை அண்மையில் சந்தித்தபோது, அரசுத்தலைவர் முக்கர்ஜி அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்தியத் திருஅவை, நாட்டிற்கு ஆற்றும் பல்வேறு சேவைகளை, குறிப்பாக, கல்வி, நலப் பராமரிப்பு ஆகியத் துறைகளில் ஆற்றும் பணிகளைப் பாராட்டிப் பேசிய அரசுத் தலைவர் முக்கர்ஜி அவர்கள், தேர்தலுக்காகச் செபிப்பதுபோலவே, தொடர்ந்து, அரசமைக்கவிருக்கும் தலைவர்களுக்காகவும் செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவர்கள், பேராயர் Andrews Thazhath, பேராயர் Filipe Neri Ferrao, மற்றும், செயலர், பேராயர் Albert D'Souza ஆகியோரும் கலந்துகொண்டனர் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.