2014-04-09 16:26:24

திருத்தந்தை பிரான்சிஸ் – மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் புனித வியாழன் திருப்பலி


ஏப்.09,2014. உரோம் நகரில், மாற்றுத்திறனாளிகளையும், வயதில் முதிர்ந்தோரையும் பராமரிக்கும் இல்லமொன்றில், ஏப்ரல் 17, புனித வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு புனித வியாழனன்று Casal del Marmo என்ற இளம் கைதிகள் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி ஆற்றினார். இவ்வாண்டு அதே பகுதியில் அமைந்துள்ள 'பராமரிக்கும் புனித மரியா' இல்லத்தில் திருப்பலியாற்றவுள்ளார்.
150 பேரைப் பாராமரிக்கும் இவ்வில்லத்தில் தங்கியிருப்போர், அவர்களுக்குப் பணியாற்றுவோர், அவர்கள் குடும்பத்தினர் ஆகிய அனைவருக்காகவும் திருத்தந்தை திருப்பலியாற்றுவார்.
முத்திப்பேறு பெற்ற Carlo Gnocchi என்ற அருள் பணியாளர் ஒருவரால் நிறுவப்பட்ட அறக்கட்டளை, அங்கக் குறையுள்ளோர் மற்றும் முதியோருக்கென இத்தாலியின் பல இடங்களில் நடத்திவரும் பராமரிப்பு இல்லங்களில், 'பராமரிக்கும் புனித மரியா' இல்லமும் ஒன்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.