2014-04-09 16:32:04

ஒவ்வோர் ஆண்டும் 1,70,000 கோடி டாலர்கள் இராணுவச் செலவுக்கென உலக நாடுகள் ஒதுக்குகின்றன


ஏப்.09,2014. உலகின் பல அரசுகள் இராணுவத்திற்காகச் செலவிடும் நிதியை, மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவிடக் கோரி, பல உலக அமைப்புக்கள் ஏப்ரல் 14, அடுத்த திங்களன்று இராணுவச் செலவு எதிர்ப்பு நாளைக் கடைபிடிக்க உள்ளன.
2011ம் ஆண்டு அகில உலக அமைதி நிறுவனத்தால் துவக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி கடைபிடிக்கப்படும் இம்முயற்சியில், Pax Christi, Columban Justice Peace and Integrity of Creation, Christian Ecology Link, போன்ற பல கிறிஸ்தவ அமைப்புக்கள் இணைந்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் 1,70,000 கோடி டாலர்கள் இராணுவச் செலவுக்கென உலக நாடுகள் ஒதுக்குகின்றன என்று Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற ஆய்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை, பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது என்று இந்த அமைப்புக்கள் கூறுகின்றன.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.