2014-04-03 17:33:15

புனிதர்பட்ட நிலைகளுக்கான படிகளுக்கென 16 இறையடியார்களின் பெயர்கள் சமர்ப்பிப்பு


புனிதர்பட்ட நிலைகளுக்கான படிகளுக்கென 16 இறையடியார்களின் பெயர்கள் இவ்வியாழன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன.
தலத் திருஅவைகளில் இது நாள்வரை புனிதர்களுக்குரிய மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டுவந்த, 17ம் நூற்றாண்டில் பிரான்சில் பிறந்து கானடாவில் ஆயராகப் பணியாற்றிய ஆயர் Francesco de Laval, பிரான்சில் பிறந்து 17ம் நூற்றாண்டில் கானடாவில் உயிரிழந்த அருட்சகோதரி Maria Guyart, 16ம் நூற்றாண்டில் பிரேசில் நாட்டில் உயிரிழந்த இயேசுசபை அருட்திரு Giuseppe de Anchieta, ஆகிய மூவரையும் புனிதர்கள் பட்டியலில் இணைக்கவும், உலக அளவில் திருவழிபாடுகளில் அவர்களின் பெயர்கள் இணைக்கப்படவும் இவ்வியாழனன்று சிறப்பு அனுமதி வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இந்தியாவின் அருளாளர்கள் அருட்திரு Cyriac Elias Chavara, அருட்சகோதரி Rosa Eluvathingal, இத்தாலியின் அருளாளர்கள் ஆயர் Giovanni Antonio Farina, Minimi துறவுசபையின் Nicola da Longobardi, இறையடியார் Luigi della Consolata ஆகியோரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமைகள் குறித்த விவரங்களும் புனிதர் பட்ட நிலைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்களால் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தங்களின் வீரத்துவப்பண்புகளுக்காக இத்தாலியின் இறையடியார்கள் அருட்திரு Adolfo Barberis, அருட்சகோதரி Maria Maddalena di Gesù Sacramentato, பொதுநிலையினரான Luigi Rocchi, இஸ்பெயினின் இறையடியார்கள் கப்புச்சின் துறவுசபையின் ஆயர் Francesco Simón Ródenas, அருட்சகோதரி Clara della Concezione, பொதுநிலையினரான Sebastiano Elorza Arizmendi, பிரான்சில் பிறந்த அருட்திரு Maria Clemente பிரேசிலின் அருட்சகோதரி Maria Teresa di Gesù Eucaristico ஆகியோரின் பெயர்களும் புனிதர்பட்ட நிலைகளுக்கான படிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.