2014-04-02 15:54:38

கெத்சமனி தோட்டத்தில், போஸ்னியா நாட்டைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் பெயரால் நினைவுக் கல்


ஏப்.2,2014. புனித பூமியின் கெத்சமனி தோட்டத்தில், போஸ்னியா நாட்டைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் பெயரால் நினைவுக் கல் ஒன்று, அண்மையில் நிறுவப்பட்டது.
1681ம் ஆண்டு போஸ்னியா நாட்டில் Brankovic குடும்பத்தைச் சேர்ந்த Pavao, Jakov, Antun என்ற மூன்று சகோதரர்கள், துருக்கிய இஸ்லாமியருக்குச் சொந்தமாக இருந்த கெத்சமனி தோட்டத்தை அவர்களிடமிருந்து வாங்கி, பிரான்சிஸ்கன் சபை துறவிகளிடம் அன்பளிப்பாக அளித்தனர்.
333 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட இந்தக் கொடையை நினைவுகூரும் விதமாக, Sarajevo பேராயர் கர்தினால் Vinko Puljić அவர்கள், இத்தோட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நாடுகளின் கோவிலில் திருப்பலியாற்றி, இம்மூன்று சகோதரர்களின் நினைவாக நினைவுக் கல் ஒன்றை நாட்டினார்.
இத்திருப்பலியில், இஸ்ரேல் நாட்டின் திருப்பீடத் தூதர், பேராயர் Giuseppe Lazzarotto உட்பட, இன்னும் சில ஆயர்கள், பிரான்சிஸ்கன் சபை துறவிகள் மற்றும் குரோவேசியா, போஸ்னியா, ஹெர்சகொவினா நாடுகளைச் சேர்ந்த பொதுநிலையினர் பலரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.