2014-03-28 16:36:38

11 ஆசிய நாடுகளில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது, உலக நலவாழ்வு நிறுவனம்


மார்ச்,28,2014. ஆசியாவில் 11 நாடுகளில் போலியோ என்ற இளம்பிள்னைவாத நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, மியான்மார், பங்களாதேஷ், இந்தோனேசியா, பூட்டான், நேபாளம், கொரியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, திமோரே- லெஸ்தே ஆகிய 11 ஆசிய நாடுகளில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக, WHO நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது உலகின் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் போலியோ நோய் அற்ற பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.