2014-03-26 15:53:33

Colosseum திடலில் நடைபெறும் சிலுவைப் பாதைக்குரிய சிந்தனைகளை எழுதுபவர் பேராயர் Giancarlo Bregantini


மார்ச்,26,2014. ஏப்ரல் 18, புனித வெள்ளியன்று மாலை, உரோம் நகர், Colosseum திடலில் திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் சிலுவைப் பாதைக்குரிய சிந்தனைகளை எழுத, இத்தாலியின் Campobasso-Boiano உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Giancarlo Maria Bregantini அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
"இன்றைய உலகில் துன்புறும் மனிதரின் முகத்தில் இயேசுவின் முகச் சாயல்" என்ற தலைப்புடன் தான் எழுதவிருக்கும் சிலுவைப் பாதை பக்தி முயற்சியில் திருஅவையின் பாரம்பரிய பழக்கமான 14 நிலைகள் இருக்கும் என்று பேராயர் Bregantini அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
துன்பம் என்பதை ஒரு கருத்தாக மட்டும் பார்க்காமல், அத்துன்பத்திற்குப் பின்புலத்தில் உள்ள மனித முகங்களை எண்ணிப்பார்க்கவும், அந்த முகங்களில் இயேசுவின் முகத்தைக் காணவும் சிலுவைப் பாதையின் முக்கிய கருத்தாக இருக்கும் என்று பேராயர் Bregantini அவர்கள் எடுத்துரைத்தார்.
இத்தாலிய ஆயர் பேரவையின் தொழிலாளர் நலன், சமுதாய நீதி பணிக்குழுவின் தலைவராக பணியாற்றும் 60 வயது நிறைந்த பேராயர் Bregantini அவர்கள், இளவயதில் தொழிலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.