2014-03-25 15:41:13

300 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய “காற்று”


மார்ச்,25,2014. பூமியில் உள்ள உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான பிராணவாயு 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
Cyanobacteria என்ற பச்சை கடல்பாசி மூலம் கடந்த 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிராணவாயு நிகழ்ந்துள்ளதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் புதிய ஆய்வுமூலம் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் வாழ்ந்துள்ளதாக கிரேட் ஆக்சைடு நிகழ்வு கூறுவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்ரிக்காவிலுள்ள ஏறக்குறைய 295 கோடி ஆண்டுகள் வயதான Pongola பாறைகளைக் கண்டுபிடித்து ஆராய்ந்த போதுதான் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
மேலும் ஆப்ரிக்காவில்தான் முதன்முதலில் உயிரினங்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நோவாவின் Planavsky பல்கலைக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம் : IANS








All the contents on this site are copyrighted ©.