2014-03-24 17:53:08

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 10 இலட்சம் குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர்


மார்ச்,24,2014. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 10 இலட்சம் குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்பட்டுவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் 10 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சைகள் கிட்டுவதால், குழந்தை இறப்புகள் அதிகமாக இருப்பதாகவும் இவ்வாய்வில் கூறப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டில் உலகில் ஏறத்தாழ 13 இலட்சம் மக்கள் காச நோயால் உயிரிழந்ததாக WHO எனும் உலக நலவாழ்வு அமைப்பு தெரிவிக்கிறது.
உலக காச நோயாளர் தினம் மார்ச் 24 இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : BBC









All the contents on this site are copyrighted ©.