2014-03-21 16:28:01

வத்திக்கான் நூலகத்திலுள்ள ஆயிரக்கணக்கான அபூர்வக் கையெழுத்துப் பிரதிகள், 2018ம் ஆண்டுவரை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்குத் திட்டம்


மார்ச்,21,2014. வத்திக்கான் நூலகத்திலுள்ள ஆயிரக்கணக்கான அபூர்வக் கையெழுத்துப் பிரதிகளை இணையத்தளத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாள்வரை வல்லுனர்கள் மட்டுமே பார்த்துவந்த இந்தப் பிரதிகளை மற்றவர்களும் பார்ப்பதற்கு வசதியாக, ஜப்பான் கனணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக, வத்திக்கான் நூலக அதிகாரிகள் அறிவித்தனர்.
15 ஆயிரம் அபூர்வக் கையெழுத்துப் பிரதிகளை 2018ம் ஆண்டுவரை இலவசமாகப் பார்ப்பதற்கு வத்திக்கான் நூலகம் வசதி செய்துள்ளது.
15ம் நூற்றாண்டில் திருத்தந்தை 5ம் நிக்கோலாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட வத்திக்கான் நூலகத்தில், கிறிஸ்தவத்தின் தொடக்ககால நூற்றாண்டுகள் முதல் எழுதப்பட்ட ஏறக்குறைய 82 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.