2014-03-18 16:25:22

உலகில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம்


மார்ச்,18,2014. உலகில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆயுத இறக்குமதி 111 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும், உலகில் இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களில் 14 விழுக்காடு இந்தியாவில் இடம்பெறுகின்றது எனவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்தியா இறக்குமதி செய்யும் ஆயுதங்களில் 75 விழுக்காடு இரஷ்யாவிலிருந்து இடம்பெறுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 80 கோடிப்பேர் கடும் வறுமையில் வாடும்நிலையில், ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்நாடு முதலிடத்தில் உள்ளது என Stockholm அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம்(SIPRI) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Aljazeera







All the contents on this site are copyrighted ©.