2014-03-17 17:04:55

திருத்தந்தை பிரான்சிஸ் - கிழக்கு திமோர் நாட்டின் ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை


மார்ச்,17,2014. கிழக்கு திமோர் நாட்டில் மனச்சான்றின் குரலைக் கட்டிக்காக்கவும், சமூகப் பொதுநலனை பொறுப்புணர்வுடன் கட்டியெழுப்பிச் செயல்படவும் தலத்திரு அவைத் தலைவர்கள் மக்களுக்கு உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த கிழக்கு திமோர் நாட்டின் ஆயர்களை, இத்திங்களன்று காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நற்செய்தியை, அதன் கூறுபடாதத் தன்மையுடன் போதிக்கும் சுதந்திரம் திருஅவைக்கு வழங்கப்படவேண்டும் என்பதை திருஅவை வலியுறுத்துகின்றது என்று கூறினார்.
மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீகத் தேவைகளை உணர்ந்து, அவற்றிற்கு ஏற்றதுபோல் மக்களுக்குப் பணிபுரிய வேண்டிய தலத்திருஅவைத் தலைவர்களின் கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறையன்பையும், மகிழ்வையும் பெற்று, வாழ்வின் பொருளை கண்டுகொண்ட ஒவ்வொருவரும் அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கக் கடமைபட்டுள்ளனர் என்பதை வலியுறுத்தவேண்டும் என்றும் கிழக்கு திமோர் ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.