2014-03-15 14:44:54

சிரியாவில் கடத்தப்பட்டுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்படுமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள்


மார்ச்,15,2014. சிரியாவில் போரின்போது கடத்தப்பட்ட அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்படுமாறு அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உரோமன் கத்தோலிக்க, அர்மேனிய கத்தோலிக்க, மாரனைட், மெல்கித்தே மற்றும் சிரியாக் வழிபாட்டுமுறைகளின் கத்தோலிக்கத் தலைவர்கள் இணைந்து லெபனனில் நடத்திய கூட்டத்திற்குப் பின்னர் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
Maloulaவிலிருந்து கடத்தப்பட்ட அருள்சகோதரிகள் விடுதலை செய்யப்பட்ட பின்னர் Aid to the Church in Need கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மெல்கித்தே வழிபாட்டுமுறையின் தலைவர் முதுபெரும் தந்தை 3ம் கிரகோரியோஸ் அவர்கள், அருள்சகோதரிகளின் விடுதலை, அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது என்று கூறியுள்ளார். 2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி கடத்தப்பட்ட சிரியன் ஆர்த்தடாக்ஸ் ஆயர் Aleppo Yohanna Ibrahim, ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் உட்பட அனைத்துக் கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் சிரியா கத்தோலிக்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.