2014-03-14 16:58:39

உக்ரேனின் அமைதிக்காவும், கூறுபடாநிலைமைக்காகவும் செபிக்குமாறு முதுபெரும் தந்தை Klyment அழைப்பு


மார்ச்,14,2014. உக்ரேன் நாட்டின் Crimea தன்னாட்சி பகுதி குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற ஞாயிறன்று இடம்பெறவுள்ளவேளை, அப்பகுதி மக்களின் வாழ்வு தற்போது அச்சுறுத்தலில் இருப்பதாக ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தந்தையர்கள் கூறியுள்ளனர்.
Crimea தன்னாட்சி பகுதியின் நெருக்கடிநிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, உக்ரேன் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Klyment அவர்கள், நாட்டின் அமைதிக்காவும், கூறுபடாநிலைமைக்காகவும் செபிக்குமாறு கேட்டுள்ளார்.
1933ம் ஆண்டில் உக்ரேன் நாடு கடும் பஞ்சத்தால் வாடியபோதும், 1941ம் ஆண்டில் நாத்சி அமைப்பினர் யூதர்களைச் சுட்டுக்கொன்றபோதும் ஐரோப்பா செயலற்று இருந்தது போல தற்போதும் இருக்கின்றது என்று குறை கூறியுள்ளார் முதுபெரும் தந்தை Klyment.
இதற்கிடையே, ஒருவர் தன்னை உக்ரேனைச் சார்ந்தவர் என்று அறிமுகப்படுத்தினால், அவர் Bandera ஆதரவாளர், எனவே அவர் கொலைசெய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக உக்ரேன் ஊடக மையம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.